\
vijay sethupathy going to  international stage
vijay sethupathy going to international stagex@sara / Vijay Sethupathi to present at the 54th International Emmy Awards

உலக மேடையில் விஜய் சேதுபதி.. எம்மி விருது வழங்கும் முதல் இந்தியர்! புதிய மைல்கல்!

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்குபவராகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி, இந்த மேடையில் இடம்பிடிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Published on: 
Summary

சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் presenter ஆக தேர்வாகி, இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த முதல் இந்தியர் என்ற சாதனையை விஜய் சேதுபதி எட்டியுள்ளார்.

எம்மி விருதுகள் கலைஞர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கும் முக்கியமான விழா. 1949ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவரும் எம்மி விருதுகள், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பிரைம்டைம் எம்மி அவார்ட்ஸ் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவும், Day time emmy awards வாழ்வியல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும், சர்வதேச எம்மி விருதுகள் அமெரிக்காவுக்கு வெளியே கலைஞர்களை சிறப்பிக்கும் சர்வதேச விருதாகவும் வழங்கப்படுகின்றன. கலைஞர்கள் பெரிதும் மதிக்கும் இந்த மேடையில் இந்திய கலைஞருக்கு குறிப்பாக தமிழ்த்திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதிக்கு தற்போது இடம் கிடைத்திருக்கிறது.

வித்தியாசமான கதைகள், எதார்த்தமான நடிப்பு என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய விஜய் சேதுபதி, தற்போது சர்வதேச மேடையில் புதிய உயரத்தைத் தொடவிருக்கிறார். நவம்பர் 23ஆம்தேதி நியூயார்க்கில் 54ஆவது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி இடம்பிடித்திருப்பதுதான் திரையுலகை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் presenters அதாவது விருது வழங்குபவர்களில் ஒருவராக இடம்பிடித்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

vijay sethupathi
vijay sethupathiBiggBossTamil10

ஏற்கனவே அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்படும் பிரைம்டைம் எம்மி விருதுகள் விழாவில் 2016ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா, Tom Hiddleston உடன் இணைந்து விருது வழங்கினார். அதேபோல, 2024ஆம் ஆண்டு நடந்த 52 ஆவது சர்வதேச எம்மி விருது விழாவில் வீர் தாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பங்கேற்றார். இவ்வாறு சர்வதேச விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரான முதல் இந்தியர் என்ற பெருமையை வீர்தாஸ் பெற்றார்.

இப்போது விருது வழங்குபவர்களில் முதல் இந்தியர் என்ற பெருமை விஜய் சேதுபதியை நாடி வந்திருக்கிறது. இவ்வாறு இந்தியர்களுக்கு பெருமை தேடித்தரும் நிகழ்வுகன் பின்னணியில் International Academy of Television Arts & Sciences வாரிய உறுப்பினர்களில் ஒருவரான கவிதா குப்தா இருக்கிறார். இவர் இந்திய திறமைகளை சர்வதேச மேடைக்கு அறிமுகம் செய்வதில் முக்கிய பங்காற்றிவருகிறார்.

54ஆவது சர்வதேச எம்மி விழாவில் இந்த ஆண்டு 22 நாடுகளைச் சேர்ந்த 64 படைப்புகள், 16 பிரிவுகளில் போட்டியிடுகின்றன. குறிப்பாக இந்தியாவில் இருந்து 2 நாமினேஷன்களும் இருக்கின்றன.

சோனி லிவ் ஸ்போர்ட்ஸ் ட்ராமா சீரிசான, Real Kashmir Football Club சிறந்த டிராமா சீரிஸ் பிரிவிலும், நெட்பிளிக்ஸ்சின் வீர் தாஸ்- Fool Volume Best Comedy Series பிரிவிலும் போட்டியிடுகின்றன.

vijay sethupathi in badha movie
vijay sethupathi in badha movie x - netflix

பத்தா திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் Train, மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் Inji Vellam, தியாகராஜன் குமாரராஜாவின் Pocket Novel, பூரி ஜெகன்நாத்தின் Slum Dog: 33 Temple Road எனப் பல வித்தியாசமான கூட்டணிகளில் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் Arasan படத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

அதுமட்டுமின்றி, 2024ல் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டிலும் ரீமேக் ஆக இருக்கிறது.

இப்படி தமிழ் சினிமாவின் கதையை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த விஜய் சேதுபதிக்கு, இப்போது International Emmy மேடையிலும் புதிய அங்கீகாரம் கிடைத்திருப்பது, இந்தியத் திரையுலகிற்கு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது..