பொன்ராம் - விஜய் சேதுபதி இணையும் புதிய படம் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பொன்ராம் - விஜய் சேதுபதி இணையும் புதிய படம் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொன்ராம்  - விஜய் சேதுபதி இணையும் புதிய படம் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’, சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. கடைசியாக, மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டினார். தெலுங்கிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ‘உப்பெனா’ படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், விஜய் சேதுபதி தமிழில் அடுத்ததாக நடிக்கும் படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது, படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் மோஷன் போஸ்டரில் காவல்துறை ஜீப்பும் கேப்பும் காட்டப்படுவதால் காவல்துறை சம்மந்தப்பட்டக் கதை என்பது தெளிவாகிறது.

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’ ‘சீமராஜா’ வெற்றிப் படங்களை இயக்கி 100 சதவீத பொழுதுபோக்கு படத்திற்கு புகழ்பெற்ற பொன்ராம் - விஜய் சேதுபதி ‘விஜய் சேதுபதி 46’ படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார்-சத்தியராஜ்-சமுத்திரகனி நடித்துள்ள ’எம்.ஜி.ஆர்’ மகன் படம் விரைவில் திரையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU
— Sun Pictures (@sunpictures) March 17, 2021

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com