வயதான கெட் அப்பில் அசத்தும் விஜய்சேதுபதி..!

வயதான கெட் அப்பில் அசத்தும் விஜய்சேதுபதி..!

வயதான கெட் அப்பில் அசத்தும் விஜய்சேதுபதி..!
Published on

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கெட் அப்பில் வருவது அவரின் தனி பாணி. கலைத்துறை மீது தீராக் காதல் கொண்டு திரையுலகில் கால்பதித்த அவருக்கு மக்களும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அவர் சாதாரணமாக செய்யும் விஷயங்களைக் கூட கெத்தாக இருப்பதாக கூறி ரசிகர்கள் பூரிக்கின்றனர். அந்த அளவிற்கு மக்களின் மனதில் விஜய்சேதுபதி இடம்பிடித்துவிட்டார். வருடத்திற்கு நிறைய படங்கள் கொடுக்கும் ஹீரோ என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இந்நிலையில் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரின் ஏராளமான ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார். வழக்கம்போல் இப்படத்தின் போஸ்டரிலும் விஜய் சேதுபதி வித்தியாசமான கெட் அப்பில்தான் இருக்கிறார். மிகவும் வயதான தோற்றத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியால் அவர் அமர்ந்திருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி பிறந்த நாளில் அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானதால் அவரது ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com