கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி ? - ‘தலைவன் இருக்கின்றான்’ அப்டேட் 

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி ? - ‘தலைவன் இருக்கின்றான்’ அப்டேட் 
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி ? - ‘தலைவன் இருக்கின்றான்’ அப்டேட் 
கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது. 
 
அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன், ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் இந்தப் படத்தில்  பணிபுரிய உள்ளதாக அறிவித்து ஐந்து வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது.  இருப்பினும் பல்வேறு காரணங்களால், இத்திட்டம் தாமதமாகி வருகிறது.
 
 
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், கமல்ஹாசன், 1992 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் படமான அமைந்த ‘தேவர் மகன்’ படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாகக் கூறியிருந்தார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைப்பாளராக பணியாற்றுவார் என்றும் தெரிவித்திருந்தார். 
 
இதனிடையே இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கமல்ஹாசன்  ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கத் தொடங்கினார். அந்தப் படத்தில் திடீரென்று விபத்து நடைபெறவே அதன் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ‘இந்தியன்2’ படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் அணுகப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி, இப்போது  கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களாக கமல்ஹாசனுடன் நல்ல நட்பைக் கொண்டுள்ளார். ஆகவே இந்தத் தொடர்பு அவரை இணைந்து நடிப்பதற்காக உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்று கூறப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com