\
தாமதமாகும் விஜய் சேதுபதி படம்

தாமதமாகும் விஜய் சேதுபதி படம்

தாமதமாகும் விஜய் சேதுபதி படம்
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் கருப்பன் படத்தின் மோஷன் போஸ்டர் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பன். ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வம் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் மோஷன் போஸ்டர் இன்று நள்ளிரவு அதாவது 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது வெளியாகாகது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை கண்டிப்பாக வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மோஷன் போஸ்டர் வெளியாகும் நேரம் தெரிவிக்கப்படவில்லை.
பாமி சிம்ஹா வில்லனாக வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமைய சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com