இந்த வருடமும் விஜய்சேதுபதி பிசி

இந்த வருடமும் விஜய்சேதுபதி பிசி
இந்த வருடமும் விஜய்சேதுபதி பிசி

இந்த வருடமும் விஜய்சேதுபதியின் கால்ஷீட் டையரி ஓவர் ஃபுல்லாகி வருகிறது.

கடந்த வருடம் அதிக படங்கள் கொடுத்த ஹீரோ என்ற அடையாளத்தோடு வெற்றி நடைபோடுகிறார் விஜய்சேதுபதி. மேலும் அதிக ஹிட் கொடுத்த ஹீரோவும் அவர்தான். வரும் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. மேலும் சீனு ராமசாமியின்  ‘மாமனிதன்’ புதிய படத்தில் கமீட் ஆகியிருக்கிறார். மேலும் அவரது இயக்கத்தில் ஏற்கெனவே ‘இடம் பொருள் ஏவல்’ படம் முழு வேலைகளும் முடிந்து தயாராக உள்ளது. சில தயாரிப்பு தரப்பு பிரச்னைகளால் அது இன்னும் வெளியாகமால் கிடப்பில் உள்ளது. பிசினஸ் உள்ள நடிகரின் படம் என்பதால் அதனை பேசி வெளியில் கொண்டுவர வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஜூங்கா’, ‘96’ படங்களில் இடைவெளியில்லாமல் நடித்து வருகிறார். பரபரப்பாக நடித்து கொண்டிருக்கும் வேளையிலேயே அவரது ‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. மேலும் எதிர்பார்ப்பு மிக்க இயக்குநரான மணிரத்னம் படத்தில் கமீட் ஆகியிருக்கிறார். இதுபோக தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள 'சை ரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்க உள்ளார். ஆகவே சேதுபதியின் கிராஃப் இந்த ஆண்டு உச்சத்தில் உள்ளது. பல இளம் இயக்குநர்கள் அவரை சந்தித்து கதை சொல்ல காத்து கொண்டிருக்கிறார்கள். அவரது செளகர்யபடி கால்ஷீட் கொடுத்தாலும் பரவாயில்லை என பொருத்து கொண்டிருக்கிறார்கள். ஆக, வழக்கம் போல் இந்த ஆண்டும் விஜய்சேதிபதியின் அதிக படங்கள் வெளியாகும் நிலை உள்ளது. ஆகவே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com