பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸ்: விஜய் சேதுபதிக்கு அழைப்பு?

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸ்: விஜய் சேதுபதிக்கு அழைப்பு?

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸ்: விஜய் சேதுபதிக்கு அழைப்பு?
Published on

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரப்பன், ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெப் சீரிஸ் இயக்குவதற்காக இயக்குநர் 6 முறை இலங்கை சென்று பல தகவல்களை திரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபாகரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com