விஜய் சேதுபதியின் கருணை உள்ளம்: மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் நிதி

விஜய் சேதுபதியின் கருணை உள்ளம்: மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் நிதி

விஜய் சேதுபதியின் கருணை உள்ளம்: மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் நிதி
Published on

அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 50 லட்சம் ரூபாய் அளிக்கவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரதாரராக பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி அந்த நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் கிடைத்த சம்பளத்தின் ஒரு பகுதியை அரியலூர் மாவட்டத்திற்கு கல்வி உதவித்தொகையாக வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் சேதுபதி பேசும்போது, " நான் விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
இப்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இதற்காக எனக்கு கிடைத்துள்ள சம்பளத் தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் 38,70,000 ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா 50,000 வீதம் 5 லட்சம் ரூபாயும், 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் 50,000 வீரம் 5,50,000 வழங்க உள்ளேன். 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன்ஹெல்லர் என்கிற செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு ரூ.50,000 என மொத்தம் 49,70,000 ரூபாயை தமிழக அரசிடம் வழங்க உள்ளேன். கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்." என்றார். இந்த நிகழ்வின் போது திரைப்பட இயக்குநர் ஜனநாதன், தனியார் சேமியா நிறுவனத்தின் உரிமையாளர்கள் கமலஹாசன், சுகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com