உடல் உறுப்புதானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்கள்

உடல் உறுப்புதானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்கள்

உடல் உறுப்புதானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்கள்
Published on

விஜய்சேதுபதியின் ரசிகர்கள் சிலர் உடல் உறுப்புதானம் செய்துள்ளனர்.

ஜனவரி 16 ஆம் தேதி நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்தநாள். ஆகவே, அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாடத்திற்கு தயாராகிவிட்டார்கள். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பான நிகழ்வை ஒருகிணைத்துள்ளனர். ஒன்றாக இணைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இது குறித்து கிடைத்த தகவல்படி, “கடந்த 5 ஆம் தேதி திருச்சியிலுள்ள விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தினர் இணைந்து அவரது பிரந்தநாளை கொண்டாடும் வகையில் உடல் உறுப்புத் தானம் செய்துள்ளோம். ஏறக்குறைய 202 ரசிகர்கள் இதை செய்துள்ளனர். அரசு மருத்துவமனையில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்துள்ளோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் உறுப்புத் தானம் குறித்து மேற்கொண்டு சில விவரங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1338 ஆக உள்ளது. திரை நட்சத்திரங்களின் ரசிகர்கள் பலரும் தங்கள் அவர்கள் விரும்பு நடிகர்களின் பிறந்தநாளின் போது ஒன்றாகக்கூடி இதுபோன்ற தானம் செய்ய முன்வந்தால் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான சமூகத்தினை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com