தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது அநாகரிகம்: விஜய்சேதுபதி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது அநாகரிகம்: விஜய்சேதுபதி
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது அநாகரிகம்: விஜய்சேதுபதி

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரரை நாகரீகம் தெரியாதவர் என நடிகர் விஜய்சேதுபதி விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் அவர் எழுந்து நின்று மரியாதை செய்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது அவர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கும் மரபும் ஜெயேந்திரர், விஜயேந்திரருக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.   விஜயேந்திரரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்ற படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டுவிழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய விஜய்சேதுபதி, தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஒருவர் எழுந்து நிற்கவில்லை என்றால் அவருக்கு அவ்வளவுதான் நாகரீகம் தெரிகிறது என விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ‘இங்கு பேசுவதற்கும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. மக்களுடைய பிரச்னைகள் நிறைய இருக்கின்றது. ஆனால் வேறு பல விஷயங்கள் முக்கியமானதாக காட்டப்பட்டு மக்களை திசைத் திருப்பும் முயற்சிகள் நடைபெறுகின்றன’ என்று கூறினார். அதோடு அவர் நிற்காமல், ‘என் ஊரில் இருக்கிற பிரச்னைகளைப் பேசுவதற்கு எனக்கு எந்தப் பயமும் இல்லை’என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com