சினிமா
8 கெட்- அப்களில் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லும்’ விஜய்சேதுபதி!
8 கெட்- அப்களில் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லும்’ விஜய்சேதுபதி!
ஆறுமுகக்குமார் இயக்கும் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் 8 கெட்-அப்களில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி.
இந்தப்படத்தில் பழங்குடியினத் தலைவராகவும் நடிக்க இருக்கிறாராம் விஜய்சேதுபதி. இப்படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இது குறித்து கூறுகையில், ‘இந்தப்படத்தின் கதை விஜய் சேதுபதியை மையப்படுத்தியே நகரும். இதில் அவர் நகரத்தில் வாழும் பழங்குடியினத் தலைவராகவும் நடிக்கிறார். படத்தின் இரண்டாம் பகுதியில் காட்டிற்குள் வசிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதில் பழங்குடியின கெட்-அப் உள்ளிட்ட 8 கெட்-அப்களில் நடிக்கிறார். அதற்காக ஹேர்ஸ்டைல், புருவம் உள்ளிட்டவற்றை ஸ்டைலாக மாற்ற இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.