\
தியேட்டர்களில் வெளியாகும் எஸ்.பி ஜனநாதன் - விஜய் சேதுபதியின் லாபம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

தியேட்டர்களில் வெளியாகும் எஸ்.பி ஜனநாதன் - விஜய் சேதுபதியின் லாபம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

தியேட்டர்களில் வெளியாகும் எஸ்.பி ஜனநாதன் - விஜய் சேதுபதியின் லாபம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ’லாபம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை’ படத்தில் இணைந்த எஸ்.பி ஜனநாதன்- விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் ’லாபம்’ படத்தில் இணைந்தனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், பட வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் கடந்த மார்ச் 14 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனையொட்டி, ’எங்கள் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் படத்தின் அனைத்து பணிகளையுயும் முடித்துக்கொடுத்துவிட்டார். படம் ஏப்ரலில் வெளியாகிறது’ என்று அறிவித்தார், இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி. ஆனால், கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தாமதமானது. இந்த நிலையில், தற்போது, தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளதால் ‘லாபம்’ வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும், செப்டம்பர் 10 ஆம் தேதி விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ நேரடியாக சன் டிவியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com