\
ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’
Published on

’காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கி இருப்பதோடு தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் ராஷிகண்ணா, யோகி பாபு, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கொரோனா சூழலால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்திலிருந்து பல தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ படம் ’சோனி லைவ்’ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிடும் என்று சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படமும் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com