\
மறுபடியும் அஞ்சலியுடன் விஜய்சேதுபதி

மறுபடியும் அஞ்சலியுடன் விஜய்சேதுபதி

மறுபடியும் அஞ்சலியுடன் விஜய்சேதுபதி
Published on

விஜய்சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. அந்தப் படத்தின் கதை அதற்கு முன்பே குறும்படமாக வெளியாகி இருந்தது. லேசாக திரைக்கதையை மாற்றி அமைத்து அதை திரைப்படமாக மாற்றினார் இயக்குநர் அருண். கதையம்சம், நடிப்பு எனப் பேசப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. ஆனாலும் விஜய்சேதுபதி சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கிய அடையாளமாகவே சொல்லப்பட்டது. 

இந்நிலையில் அருண் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதிபதி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைப்பெற்றது. அந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க இருக்கிறார். ‘இறைவி’ படத்திற்குப் பின் மீண்டும் இந்தப் புதிய படத்தில் விஜய்சேதுபதிக்கு அஞ்சலி ஜோடியாக நடிக்க இருக்கிறார். தமிழில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்துவந்த அஞ்சலி மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வழக்கமாக யதார்த்தக் கதைகளை தேர்தெடுத்து நடித்து வரும் விஜய்சேதுபதி, இந்தப் படத்தில் ஆக்‌ஷன் ரோலில் நடிக்க உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com