ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தின் வேலைகள் ஏறக்குறைய முழுமை பெற்றுவிட்டது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் விஜய் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் வெளியானபோது, புகைப்பிடிக்கும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து புகைப்பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து புகைப்பிடிக்கும் படங்கள் நீக்கப்பட்டது. இதன்பின்னர் விஜய் குடை பிடித்தபடி, படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.
இந்நிலையில் விஜய் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி மீண்டும் வைரலாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் எடுக்கப்பட வேண்டிய சீன் குறித்து விஜய்க்கு, முருகதாஸ் விளக்கிக்கூறுவது போன்று உள்ளது.