கசிந்ததா ‘சர்கார்’ கதை?

கசிந்ததா ‘சர்கார்’ கதை?
கசிந்ததா ‘சர்கார்’ கதை?

விஜய்யின் ‘சர்கார்’ படக் கதை என்னவாகும் இருக்கும் என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் செய்திகள் கசிந்து வருகின்றன.

டீசர் தொடங்கிய உடனே வரலட்சுமியின் குரலில் கூறப்படும் வார்த்தைகள், “அவன் ஒரு கார்ப்ரேட் மான்ஸ்டர். எந்த நாட்டுக்கு போனாலும் தன்னை எதிர்க்கிறவங்கள அழிச்சுட்டுதான் வெளிய போவன்” என்பதுதான். இதையடுத்து காட்டப்படும் காட்சிகளில் வெளிநாட்டில் ராஜ வாழ்க்கை வாழும் விஜய், சொந்த ஊரான சென்னைக்கு வருவதுபோல காட்சிப்படுத்தியுள்ளனர். அவர் ஒரு சர்வதேச தொழிலபதிபர் என்பதால் பத்திரிகையாளர்கள் அவரை விமான நிலையத்திலேயே சூழ்ந்துக்கொள்ள, தேர்தல் வருவதால் தான் தனது வாக்கைப் பதிவு செய்ய வந்ததாக கூறுகிறார்.

இதற்கு முன்னர் சுமார் 15 நிமிட திரைப்படம் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளதாம். அங்கே விஜய்யின் ஓபனிங் சாங்கும் வந்துவிடுமாம். இதைத்தொடர்ந்து சென்னைக்கு வாக்களிக்கும் இடத்திற்கு வரும் விஜய்க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டனர். இதனால் ஆத்திரமடையும் விஜய், தன் ஓட்டை பறித்தவர்களுக்கு பாடம் புகட்டும்  வழியில், கள்ள ஓட்டை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்கிறார். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால்,  தாங்கள் தேர்தலில் வெற்றி பெறமுடியாத நிலை ஏற்படும் என உள்ளூர் அரசியல்வாதிகள் விஜய்யை எதிர்க்கின்றனர். அப்படி எதிர்க்கும் ஒரு மூத்த அரசியல்வாதிதான் ராதாரவி. இதற்கிடையே தேர்தலின் போது, வாக்குப்பதிவு நடக்கும் பூத்தில் தற்காலிகமாக பணிபுரியும் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு உதவுவதற்காக அவருடன் சேர, அவர்களது காதல் மலர்கிறது என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து விஜய் கள்ள ஓட்டை ஒழிக்கும் முயற்சியில் இளைஞர்களுடன் தீவிரமாக இறங்க, அரசியல் வாதிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. விஜய் கள்ள ஓட்டை மட்டும் ஒழிக்காமல் தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக ராதாரவி கட்சியினர் கொண்டு வரும் பணத்தை கண்டெய்னருடன் விஜய் தேர்தல் அதிகாரிகளிடம் பிடித்துக்கொடுக்கிறார். விஜய் தனியாக இதனை செய்யமால், இளைஞர்கள் குழுவுடன் சேர்ந்து செய்கிறார்.  இதற்காகத்தான் அரசியல் மேடையில் விஜய்க்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. அந்தக் காட்சிதான் டீசரில் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் சூடு அதிகரிக்க விஜய்க்கு அரசியல்வாதிகளின் கோர முகம் தெரியத் தொடங்குகிறது. “நீ போட்டி போட்டு எளிதாக ஜெயிக்க நாங்கள் என்ன தொழிலதிபர்களா? அரசியல் முதலைகள்” என விஜய்க்கு மரண அடியை கொடுக்கின்றனர் ராதாரவியும், அவரது கட்சியினரும். 

இதில் விஜய் உடன் இருந்த இளைஞர்கள் பலரும் தாக்கப்பட்ட, சிலர் கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து விஜய் டீசரின் முதல் வரியில் வரலட்சுமி சொன்ன “எந்த நாட்டுக்கு போனாலும் தன்னை எதிர்க்கிறவங்கள அழிச்சுட்டு தான் வெளியபோவன்”என்ற வார்த்தைகள் தான் படத்தின் கதையாக இருக்கிறது.  தன்னை எதிர்த்த அரசியல்வாதிகளை விஜய் ஒழிக்கிறார். 

தேர்தலில் பல சீர்த்திருத்தங்களை கொண்டு வருகிறார். இறுதியில் விஜய்யை இளைஞர்கள் மற்றும் மக்கள் தலைமை ஏற்குமாறு அழைக்க, “நாட்டை திருத்தும் தலைவனை உங்களுள் இருந்து தேர்ந்தெடுங்கள். தேர்தலில் பணம் வாங்காமல்  வாக்களியுங்கள். அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்புங்கள். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள். அதன்பின் நீங்கள்  நினைத்துபோல மக்கள் சர்க்கார் உருவாகும்” என ஒரு மாஸ் ஸ்பீச்சைக் கொடுத்துவிட்டு வெளிநாடு விஜய் புறப்படுகிறார்.

மேலும் “நேரம் வரும்போது நான் கட்டாயம் வருவேன்” என ஒரு அரசியல் எண்டெரி ட்விஸ்டையும் கூறிவிட்டுச் செல்கிறார் விஜய். இதுதான் விஜய் நடிப்பில் வரவுள்ள ‘சர்கார்’ படத்தின் கதை என கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு  உண்மை என்பது தெரியவில்லை.   
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com