விஜயின் மெர்சல் படப்பெயரை இனி பயன்படுத்த முடியாது
தென்னிந்திய திரையுலகில் முதன்முறையாக மெர்சல் படத்திற்கு டிரேட் மார்க் பெறப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் 'மெர்சல்' படத்தை பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் படக்குழு, தற்போது 'மெர்சல்' என்ற தலைப்புக்கு வணிகச் சின்னம் (டிரேட் மார்க்) பெற்றுள்ளது. இனி 'மெர்சல்' தலைப்பை வேறு ஏதாவது பொருளுக்கு உபயோகித்தால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்தியாக வேண்டும். தென்னிந்திய திரையுலகில் ஒரு படத்தின் பெயருக்கு வணிகச் சின்னம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பாக தனுஷ் அனிருத் கூட்டணியில் உருவான ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு வணிகச் சின்னம் பெற்றிருந்தனர். தென்னிந்திய படங்களில் முதல் ட்விட்டர் எமோஜி கொண்ட படம் பெயரையும் 'மெர்சல்' பெற்றுள்ளது.