வெளியானது மாஸ்டர் புதிய போஸ்டர் - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

வெளியானது மாஸ்டர் புதிய போஸ்டர் - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

வெளியானது மாஸ்டர் புதிய போஸ்டர் - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
Published on

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் தளபதி 64. மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்த இயக்குகிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ஆண்டிரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன்தாஸ், சாந்தனு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர்.

விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இப்படத்திற்கு, கத்தி படத்தை தொடர்ந்து இராண்டாவது முறையாக அனிருத் இசையமைக்கிறார். படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்று தகவல் வெளியான நிலையில் நிலையில், கடந்த மாதம் வெளியான படத்தின் ப்ர்ஸ்ட் லுக்கும், தலைப்பும் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அது மட்டுமல்லாமல் வெளியான சில மணி நேரங்களிலேயே ஃபஸ்ட் லுக் போஸ்டரும், தலைப்பும் விஜய் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றதை நாம் சமூக வலைதளங்களில் பார்க்கமுடிந்தது.

குறிப்பாக படத்தின் போஸ்டரை வடிவமைத்திருந்த விதம் அனைவராலும் பாரட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பொங்கல் நாளான இன்று தளபதி 64 படத்தின் இராண்டாவது போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் போஸ்டரை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். தற்போது படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் போஸ்டரில், விஜய் மேஜை ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு, கைக்காப்பு ஒன்றினை சுழற்றிவிடுவது போலவும் ஒரு கையினை தன்னுடைய தலைமுடியை கோதி இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரில் விஜய் மாணவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, பேசாமல் இருங்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய விரலினை உதட்டின் மேல் வைத்திருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. கருப்பு நிற உடை, கருப்பு நிற கண்ணாடி, என இந்த போஸ்டரும் படத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் கருப்பு நிற உடை அணிந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தத்தில் முதல் மற்றும் இராண்டாவது போஸ்டர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாநகரம் கைதி படங்களை போன்று இப்படமும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கு என எதிர்பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com