வெறித்தனமான வரிகள்.. மிரட்டும் "மாஸ்டர்" வாத்தி ரெய்டு பாடல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத் தட்ட முடிந்துவிட்ட நிலையில் அதன் ப்ரமோசன் வேலைகளிலும் ஒருபுறம் படக்குழு களமிறங்கியுள்ளது.
இதனிடையே, கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி "let me sing a kutti story" என்ற பாடல் வெளியானது. அதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளும் கூட "let me sing a kutti story" பாடலைப் போலவே தனி அடையாளங்களை தாங்கி நின்றது. பின்னர், மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான ‘வாத்தி coming’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இதுஒரு பாடலைப் போல் அல்லாமல் தீம் இசையைப் போல் இருந்தது. இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் அருவி இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
“ஆனா ஆவன்னா..
ஆப்னா டைம்மு ண்ணா..
வாங்கனா வணக்கம்ண்ணா...
வாத்தி ரைடு ண்ணா..” என்ற வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.
மேலும், “உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
தூக்கிப்போட்டு சாத்துவாரு..
தட்டி தட்டி தூக்குவாரு
கெட்ட புள்ள திருந்திட சட்டம் தான் டா இடம்
உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி ரெய்டு
வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு
வந்து வாண்டடாவே மாட்டிடாத .. பாத்து போய்டு
நண்பா நல்ல மாதிரி சொல்லும் போதே.. கேட்டு போய்டு
நம்ம வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு
மேல ஏத்தி விட்டு பாத்திடாத வேற சைடு
இந்த வாத்திக்கிட்ட வச்சிக்காத ஓரம் போயிடு
நம்ம வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு
பங்கம் பங்கம் பதிலடி .. சந்து பொந்து சரவெடி
அண்ணா பண்ணும் அதிரடி
வாத்தி யாரு .. தளபதி
பிளாக்கு தங்கம் டீ .. காட்டு சிங்கம் டீ
நவுரு நீ .. வாக் ஆக பார்த்து நீ கேட்ட ஆ மூடு ..
தே கால் மி மாஸ்டர்.. மாற்றங்கள் வரும் ஃபாஸ்டர்
கற்பி ஒன்று சேர்.. வெற்றி கொண்டு சீர்
திருந்துர வாத்தியாரு கூர் .. விழியில பார்
வகுப்பற நடுங்கும் .. இரும்பு கரம் அடங்கும்
அரச மரம் முழ்க்க தவரும் நேரம்
பக்குவமா சொல்லும் போதே கேட்டுக்குங்க செல்லம்..
இல்லைனா வாத்தியாரு கம்பு வந்து கொஞ்சும்
வேணாம் பிலிப்பு இது .. வானிங் சிரிப்பு வந்து
தானாவே வந்து ஒத்துகிட்டா போலாம் .. சமத்துக்குட்டி
எங்கமா அங்க சத்தம் .. வச்சா மூக்கு மேல ரத்தம்
நண்பா எங்க ஓடி ஒளிஞ்சாலும் வாத்தி கண்ணு தூக்கும் ..
வாத்தியாரு பேச்ச கேட்டா .. வாழ்க்க மேல ஏறும்
தேவையில்லா வேல பாத்தா .. முட்டி போட நேரும்
நிக்காத நிக்காத மறுபடி சிக்காத சிக்காத
ஒருமுறை தொட்டாலே கெட்டானே .. பதிலடி பக்கா வெப்பானே
தெருவுல நடக்கற கொடுமைய கடக்கற தலைமுறை..
படிக்கற தமிழில இருக்குது பொதுமறை..
எதுக்குனு விலகற பழக்கமும் எனக்கில்ல..
எப்போதும் என்னோடிருக்கும் பட்டாளம் உண்மை உரைக்கும்..
கட்டாயம் மண்ணை திரட்டும்..
பேதங்கள் இல்லாதிருக்கும்..
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்..
இதுவரை பொறுத்தோம் சும்மா.. அடி விழு இனிமே கும்மா..
பங்கம் பங்கம் பதிலடி .. சந்தும் பொந்தும் சரவெடி .. உள்ள வந்தா பவர் அடி
பிளாக்கு தங்கம் டீ .. காட்டு சிங்கம் டீ .. இது பீஸ்ட்டு மோடு.. ” என்று இந்த பாடல் வரிகள் முடிகிறது.