மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங்... விஜய்யின் அறிமுகக் காட்சி குறித்து வெளியான தகவல்!!
சினிமா படப்பிடிப்புகள் தொடங்கப்படுமா, தியேட்டர்கள் திறக்கப்படுமா என்ற கேள்விகள் வரிசைகட்டி நிற்கும்போது, ரசிகர்களோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்தப் படத்தில் விஜய்யின் அறிமுகக்காட்சி எப்படி இருக்கும் என்பது பற்றிய சுவையான தகவல் வெளிவந்துள்ளது.
மாஸ்டர் படத்தின் போஸ்டரை மட்டும் கண்டுள்ள ரசிகர்கள் டீஸர் அல்லது டிரெய்லருக்காக காத்திருக்கிறார்கள். முதல்முறையாக ஒரு கல்லூரிப் பேராசிரியராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். படத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
தற்போது நடிகர் சஞ்சீவ் மேலும் ஒரு முக்கிய தகவலை உடைத்திருக்கிறார். அதாவது தன் கல்லூரி நண்பர்களை நடிகர் விஜய் சந்திப்பதுதான் மாஸ்டர் படத்தின் அறிமுகக் காட்சி என்று தெரிவித்துள்ளார். "வாத்தி கம்மிங்" பாடல்தான் ஓப்பனிங் சாங். ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைக்கும் அனைத்து ரசனைகளும் படத்தில் உள்ளதாகத் தெரிகிறது.