மாஸ்டர் படத்தில் விஜய் பெயர் இதுதான்.. இணையத்தில் வைரலாகும் ஐ.டி கார்டு!

மாஸ்டர் படத்தில் விஜய் பெயர் இதுதான்.. இணையத்தில் வைரலாகும் ஐ.டி கார்டு!

மாஸ்டர் படத்தில் விஜய் பெயர் இதுதான்.. இணையத்தில் வைரலாகும் ஐ.டி கார்டு!
Published on

மாஸ்டர் படத்தில் விஜய் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியாகியிருக்கிறது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். கதாநயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜீன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளார் அனிருத் மாஸ்டர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும், பிகில் பட இசைவெளியீட்டு விழாவில் ரசிகர்கள் எதிர்கொண்ட சர்ச்சையாலும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய் படப்பிடிப்பின் போது நடந்த ரெய்டு அனுபவங்களை கருத்தில் கொண்டு “ 20 வருடங்களுக்கு முன்னர் ரெய்டு இல்லாமல் நன்றாக இருந்தேன் என்றும் தற்போது ரெய்டு இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறேன்” என்று பேசியிருந்தார். இதனை தொடர்ந்து இவரது பேச்சு சமூகவலைதளங்களில் வைரலானது.

கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருக்கும் இப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் விஜயின் பெயர் தற்போது வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜெடி’ என சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், அதன் முழு வடிவம் ஜேம்ஸ் துரைராஜ் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது விஜயின் படத்துடன் இணைந்த ஒரு ஐ.டி கார்டு ஒன்று சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ஐ.டி கார்டில் விஜயின் புகைப்படம் மற்றும் அவர் பணிபுரியும் கல்லூரியான ஜெவ்ரி காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பெயர் இடம்பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் அவரின் கதாபாத்திரத்தின் பெயரான ஜான் துரைராஜ் என்பதும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ஜான் துரைராஜ் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், படக்குழு தயாரிப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com