“ரசிகர்களின் பேரன்பை பெற்றவர் விஜய்”- பிரபலங்களின் வாழ்த்துகளால் நிரம்பி வழியும் ட்விட்டர்
நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன், மோகன்லால், உதயநிதி என சினிமாத்துறையினர் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 47 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், காஜல் அகர்வால், தன்யா ரவிச்சந்திரன், ரகுல் ப்ரீத் சிங், பூஜா ஹெக்டே, ராஷி கண்ணா, நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், உதயநிதி, தனுஷ், மோகன்லால், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒருபக்கம் விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்கிறார்கள் என்றால், சினிமா துறையினரும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள். ட்விட்டர் முழுக்க விஜய் பிறந்தநாள் வாழ்த்துகளே நிரம்பி வழிகிறது.
கமல்ஹாசன்:
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில். “தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்குக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்:
நடிகை கீர்த்தி சுரேஷ் “பீஸ்ட் ஒவ்வொருவருக்கும் விருந்தாக இருக்கும். தெறிக்க விடுங்க விஜய் சார். பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் அண்ணா. லவ் யூ” என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி:
நடிகர் உதயநிதி ஸ்டாலின் “வசீகரமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர், என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
சிபிராஜ், விக்ரம் பிரபு, துல்கர் சல்மான் என இன்னும் பல நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.