“உனக்காக வாழ நினக்கிறேன்..” - வெளியானது  ‘பிகில்’ மெலோடி 

“உனக்காக வாழ நினக்கிறேன்..” - வெளியானது  ‘பிகில்’ மெலோடி 
“உனக்காக வாழ நினக்கிறேன்..” - வெளியானது  ‘பிகில்’ மெலோடி 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் ‘உனக்காக’ பாடல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப்  உள்பட பலர் நடித்துள்ளனர். 

படத்தின் பாடல்கள் வரும் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், 'உனக்காக' பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தார தல்லுரி பாடியுள்ளனர்.

“உனக்காக வாழ நினைக்கிறேன்..உசுரோட வாசம் புடிக்கிறேன்” என தொடங்கும் இந்தப் பாடலின் வரிகள் மிகவும் அழகாக உள்ளது. “தெனம் நீ தூங்கும் வரை தான் என் வாழ்க்கையே.. விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டா தான் எடுப்பன் மூச்சையே..” என்பது போன்ற காதல் வரிகள் உள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் நல்ல மெலோடி பாடலாக அமைந்துள்ளது.

சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உனக்காக பாடலுக்காகவும் ரசிக்கும்படியான மெலோடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com