இறுதி கட்டத்தை அடைந்த விஜய்யின் ”வாரிசு”-பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தீவிரம்

இறுதி கட்டத்தை அடைந்த விஜய்யின் ”வாரிசு”-பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தீவிரம்
இறுதி கட்டத்தை அடைந்த விஜய்யின் ”வாரிசு”-பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தீவிரம்

விஜய் நடிக்கும் ”வாரிசு” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் 'வாரிசு'. இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜயின் 66வது படமாக உருவாகி வருகிறது 'வாரிசு' திரைப்படம். இதில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா மற்றும் ஷாம் எனப் பலரும் இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது.‌ இதில் மீதமுள்ள இரண்டு சண்டைக் காட்சிகளும், இரண்டு பாடல்களும் படமாக்கப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. எனவே சொன்னபடி படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர் என்பதை தயாரிப்பாளர் தரப்பும் உறுதி செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com