\
’தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்’ - விஜய்யின் ‘தளபதி 65’ புது அப்டேட்ஸ்

’தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்’ - விஜய்யின் ‘தளபதி 65’ புது அப்டேட்ஸ்

’தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்’ - விஜய்யின் ‘தளபதி 65’ புது அப்டேட்ஸ்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில், தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தாலும், சமீபத்தில் விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸுடன் முறையான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் வரிசையில் நான்காவதாக இந்த நடிகர் - இயக்குநர் காம்போ ஜோடி சேருகிறது. ’தளபதி 65’இல் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணிபுரிய இருக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் நடன இயக்குநரான இரட்டையர் அன்பரிவ் இந்த படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இவர்கள் ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘கைதி’ போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளனர். விஜய்யுடன் இவர்கள் இணையப்போவது இதுவே முதல்முறையாகும்.

மேலும், மடோனா செபாஸ்டியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com