ஜூன் 21 அன்று விஜய்யின் ‘தளபதி62’ பர்ஸ்ட் லுக்

ஜூன் 21 அன்று விஜய்யின் ‘தளபதி62’ பர்ஸ்ட் லுக்
ஜூன் 21 அன்று விஜய்யின் ‘தளபதி62’ பர்ஸ்ட் லுக்

ஜூன் 21 அன்று ‘தளபதி62’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் ‘தளபதி62’. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. கல்கத்தா, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் ‘பைரவா’விற்கு அடுத்து விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்ற படப்பிடிப்பு காட்சிகள் சில தினங்கள் முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இதனை அடுத்து நடிகர் விஜய்க்கு ஜூன் 22 அன்று பிறந்தநாள் வர உள்ளது. அதனையொட்டி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘தளபதி62’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்திற்கான தலைப்பை ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளதையும் அவர் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com