“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர் 

“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர் 

“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர் 
Published on

இந்தத் தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு ‘தளபதி தீபாவளி’. அந்த உற்சாகத்தில்தான் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டு வருகிறார்கள். விரைவில் வெள்ளித்திரையில் விஜயின் ‘வெறித்தன’த்தை பார்க்க வேண்டும் என்பது ‘புள்ளிங்கோ’ எதிர்பார்ப்பாக உள்ளது. ‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே விஜயின் ‘தளபதி64’ பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது. 

இந்தப் படத்தினை ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இவர் இயக்கி ‘கைதி’ படமும் விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பக்கம் விஜயின் புதிய படத்தின் இயக்குநர், இன்னொரு பக்கம் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ படத்தின் வெளியீடு என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் லோகேஷ். 

லோகேஷ் இயக்கி வரும் விஜய் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. ஆனால் அதற்குள் இந்தப் படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. அதற்கு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரது எக்ஸ்பி ஃபிலிம் கார்பரேஷன் தான் ‘தளபதி64’ படத்தை தயாரித்து வருகிறது. இவர் விஜயின் நெருங்கிய உறவினர். 

இந்நிலையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தினை தயாரிப்பதில் இருந்து விலகிவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக வேறு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இதனை கையில் எடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் உட்பட பல இடங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தச் செய்தி குறித்து இப்போது சேவியர் விளக்கம் அளித்துள்ளார். 

அவர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேசி உள்ள பதிவில், “நாங்கள் தயவு செய்து உங்களை கேட்டுக் கொள்கிறோம். இதைபோன்ற எதிர்மறையான செய்தியை பரப்ப வேண்டாம். நான் விலகிவிட்டேன் என்ற செய்தி உண்மையானதல்ல. இப்படத்தின் படப்பிடிப்பு மிக அருமையாக போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் திட்டமிட்டபடி முதல் படப்பிடிப்புகாக வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

‘தளபதி64’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். மேலும் படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீராம் எனப் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com