\
விஜய் பட டைட்டில் அது இல்லையாம்!

விஜய் பட டைட்டில் அது இல்லையாம்!

விஜய் பட டைட்டில் அது இல்லையாம்!
Published on

தெறி படத்துக்குப் பிறகு விஜய் படத்தை மீண்டும் இயக்குகிறார் அட்லீ. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ரஜினியின் ’மூன்றுமுகம்’ படத்தின் டைட்டிலை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. அதோடு ரஜினி பட டைட்டில் என்று மூன்று முகம் லோகோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, ‘படத்துக்கு ஐந்து டைட்டில்கள் யோசித்தோம். அதில் மூன்று முகம் டைட்டிலும் ஒன்று. ஆனால், நாங்கள் இன்னும் டைட்டிலை முடிவு செய்யவில்லை. ஜூன் மாதம் பர்ஸ்ட் லுக்கையும் டைட்டிலையும் வெளியிட இருக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com