கோலிசோடா 2-வில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்: விஜய் மில்டன் தகவல்

கோலிசோடா 2-வில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்: விஜய் மில்டன் தகவல்

கோலிசோடா 2-வில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்: விஜய் மில்டன் தகவல்
Published on

’கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்று இயக்குனர் விஜய் மில்டன் சொன்னார்.

 ’கோலிசோடா 2’ பட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. நான்கு முதன்மை கேரக்டர்களைச் சுற்றி நடக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, ’சமுத்திரக்கனி கேரக்டர், முதல் பாகத்தில் வந்து கலக்கிய ஏடிஎம் கேரக்டரை போன்று முக்கியத்துவம் வாய்ந்தது. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கான்ஸ்டபிள் கேரக்டர். அவரது தோற்றம் வித்தியாசமாகவும் பேசப்படுவதாகவும் இருக்கும். இதை தவிர மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. படப்பிடிப்பு இப்போது நடந்துகொண்டிருக்கின்றது. படத்தை எனது 'Rough Note' நிறுவனம் தயாரிக்கிறது’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com