\
படப்பிடிப்பின்போது படுகாயமடைந்த ஊழியர் : மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்

படப்பிடிப்பின்போது படுகாயமடைந்த ஊழியர் : மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்

படப்பிடிப்பின்போது படுகாயமடைந்த ஊழியர் : மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்
Published on

படப்பிடிப்பின்போது அடிப்பட்ட ஊழியரை நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. விஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது 100 அடிக்கு மேல் அமைக்கப்பட்டுருந்த போக்கஸ் லைட் தவறி கீழே நின்று கொண்டு இருந்த எலெக்ட்ரீஷியன் செல்வராஜ் மீது விழுந்தது. 

இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் விஜய் அடிப்பட்ட மாரிமுத்துவை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com