மெர்சல் படத்தில் சிங்கிள் டிராக் தயாராகி விட்டதாகவும், விரைவில் வெளியாகும் எனவும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்ப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் வரும் 20-ம் தேதி நடக்கிறது. அதற்கு முன்பாக சிங்கிள் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதனால், மெர்சல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முன்னதாக ஓரிரு மாதங்களுக்கு முன் மெர்சல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. இந்தப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது.