\
விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு?

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு?

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு?
Published on

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக எடுக்கப்பட்ட பங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளங்களில் வெளியானது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையங்குகள் திறக்கபட்டிருந்தாலும் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஒரு சில சிறிய பட்ஜெட் அளவிலான படங்கள் மட்டுமே வெளியாகி வருகிறது.

பெரிய பிரபலங்கள் பட்டியலில் உள்ள சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தயாராகி வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறது. இதனால் அப்படம் தியேட்டரில் வெளியாகிறதா அல்லது ஓடிடியில் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியது.

இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு விளக்கம் அளித்தது. இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com