\
விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்
Published on

விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ’விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்களும், முகக்கவசங்களும் வழங்கியுள்ளனர்.

கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா அதிகம் பாதித்த மஹாராஷ்டிரா, குஜராத்,சட்டிஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம் என பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைக்கான படுக்கை பற்றாக்குறை போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நல்ல செயலுக்காக விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கத்தினர் தேனி சின்னமனூர் காவல்நிலையத்திற்கு கிருமிநாசினி இயந்திரம் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com