“விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு” - எஸ்.ஏ சந்திரசேகர்

“விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு” - எஸ்.ஏ சந்திரசேகர்
“விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு” - எஸ்.ஏ சந்திரசேகர்

”விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுள்ளது” என்று நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டம் நடத்த தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபனா உள்ளிட்டோருக்கு நடிகர் விஜய் தடைக்கோரிய வழக்கில், “கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழுவில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் போடப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை. ரசிகர்களாகத் தொடர்கிறார்கள்” என்று விஜய் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தமாதம் அக்டோபர் 29 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com