\
லோகேஷ் - விஜய் கூட்டணியின் ‘தளபதி 67’ படப்பிடிப்பு துவங்கியது? - பிரபல நடிகர் ட்வீட்

லோகேஷ் - விஜய் கூட்டணியின் ‘தளபதி 67’ படப்பிடிப்பு துவங்கியது? - பிரபல நடிகர் ட்வீட்

லோகேஷ் - விஜய் கூட்டணியின் ‘தளபதி 67’ படப்பிடிப்பு துவங்கியது? - பிரபல நடிகர் ட்வீட்
Published on

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக, நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வருகிற 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இந்தப் படம் ‘வாரசுடு’ என்றப் பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றநிலையில், படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே வெளியான அறிவிப்புடன், படத்தின் பூஜையும் மிக ரகசியமாக அண்மையில் நடைபெற்றது. ‘மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இந்தப் படத்திற்காக இரண்டாவது முறையாக இணைய உள்ளனர். இயக்குநர் கௌதம் மேனன் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றின் மூலம் உறுதிசெய்யப்பட்டது. மேலும், நடிகை த்ரிஷா, ‘கில்லி’, ‘ஆதி’, ‘திருப்பாச்சி’, ‘குருவி’ உள்ளிட்டப் படங்களுக்குப் பிறகு நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போதும் துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தளபதி 67’ படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதில், “தளபதி 67- படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது... லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்... அதே ஆற்றலுடனும், முழு வீச்சிலும்.. முதல் நாளே.. தூள்...” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com