vijay jana nayagan movie release date announced
ஜனநாயகன்x page

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! குஷியில் ரசிகர்கள்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.
Published on

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. முழு நேர அரசியல் களத்துக்கு வர முடிவு செய்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், தனது திரையுலகப் பயணத்தை நிறைவு செய்யும் படத்துக்காக இயக்குநர் ஹெ.வினோத்துடன் கரம் கோர்த்துள்ளார். ‘ஜனநாயகன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன.

‘ஜனநாயகன்’ என்ற தலைப்புக்காகவே திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தத் திரைப்படம். இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது என, வண்ணமயமான போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

vijay jana nayagan movie release date announced
தளபதி 69: ‘ஜனநாயகன்’ விஜய்.. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com