இங்கிலாந்து தேசிய விருது போட்டியில் விஜய்!

இங்கிலாந்து தேசிய விருது போட்டியில் விஜய்!

இங்கிலாந்து தேசிய விருது போட்டியில் விஜய்!
Published on

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட விருதுகள் 2018ல் சிறந்த துணை நடிகருக்கான போட்டியாளர்கள் பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ’மெர்சல்’  திரைப்படம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்தப் படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. டைட்டிலில் தொடங்கி,  படத்தில் இடம்பெற்ற வசனங்கள் வரை இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இவற்றை எல்லாம் முறியடித்து வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 2017 ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம்பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாகவும் ஓடியது. 

இந்நிலையில், இந்தப் படத்திற்கு உலகளவில் மற்றொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் நடைபெறும், தேசிய திரைப்பட விருதுகள் 2018 ல், சிறந்த துணை நடிகருக்கான போட்டியாளர்கள் பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதனுடன், சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் போட்டி பட்டியலில் ’மெர்சல்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. போட்டியாளர்களில் வெற்றி பெறுபவர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஆன்லைன் வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. இந்த வாக்குப்பதிவு நேற்று முதல் ஆரம்பமாகி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் பலர், ஆன்லைனில் விறுவிறுப்பான வாக்குப்பதிவியில் இறங்கியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com