’பீஸ்ட்’ டெல்லி படப்பிடிப்பு முடிந்ததும் ஷாப்பிங் சென்ற விஜய்

’பீஸ்ட்’ டெல்லி படப்பிடிப்பு முடிந்ததும் ஷாப்பிங் சென்ற விஜய்
’பீஸ்ட்’ டெல்லி படப்பிடிப்பு முடிந்ததும் ஷாப்பிங் சென்ற விஜய்

’பீஸ்ட்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் டெல்லி மாலுக்குச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. மேலும், இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடத்தினர் படக்குழுவினர்.

விஜய் ஷாப்பிங் சென்ற வீடியோவைக் காண: https://twitter.com/VjPalanivel_Vfc/status/1441682541623185412

இதை முடித்துக்கொண்டு சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் கடந்தவாரம் டெல்லி சென்றனர். அங்கு 5 நாட்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், டெல்லி படப்பிடிப்பு நிறைவடைந்து நேற்று சென்னை திரும்பினர் படக்குழுவினர். இந்த நிலையில், விஜய் டெல்லியில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவடைந்தபிறகு அங்குள்ள பிரபலமான டிஎல்எப் மாலுக்குச் சென்றுள்ளார். மஞ்சள் நிற டி-சர்ட்டில் விஜய் செல்வதைப் பார்த்த ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த, வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com