\
பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விஜய்

பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விஜய்

பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விஜய்
Published on

ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் இன்று வெளியிடப்படுகிறது.

ஜூன் 22 - விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியிடப்படுகிறது.

இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், இயக்குனர் அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்திற்கு இது 100 வது படம். சென்னையிலும், ஐரோப்பாவிலும் படமான இந்தப் படத்தின் பாடல் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திலும், படத்தின் ரிலீஸ் அக்டோபர் மாதத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com