ஜனநாயகன் அப்டேட்
ஜனநாயகன் அப்டேட்x

'சிங்கத்தின் முதல் கர்ஜனை வருகிறது..' இன்று இரவு விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்!

நடிகர் விஜய் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகிவரும் ஜனநாயகன் படத்தின் புதிய அப்டேட் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சினிமாவிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய சினிமா கரியரின் கடைசி திரைப்படமாக ’ஜனநாயகன்’ படத்தில் நடித்துவருகிறார்.

எச் வினோத் இயக்கம் நடிகர் விஜயின் 69வது படத்தில் அனிமல் பட வில்லனான பாபி தியோல், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே மற்றும் பிரேமலு புகழ் பட நடிகை மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

ஜனநாயகன்
ஜனநாயகன்pt web

ஜனநாயகன் ஒரு கமர்சியல் படமாகவும், அதேநேரத்தில் அரசியல் பேசும் திரைப்படமாகவும் இருக்கும் என்று இயக்குநர் எச்.வினோத் கூறியிருந்த நிலையில், அரசியல் எண்ட்ரீக்கு முன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

இத்திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிங்கத்தின் முதல் கர்ஜனை வருகிறது..

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கான புதிய அப்டேட்டை வழங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம், விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதியை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. அதனுடன் ஒரு பாடலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ’A lion is always a lion & his first roar is incoming’ என்ற டேக் லைனுடன் ஜுன் 22 நள்ளிரவு 12 மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் ஃப்போட்டோவில், விஜயின் கைகள் ஓங்குவது போலவும் பின்னால் சூரியன் அஸ்தமனமாவது போலவும் இடம்பெற்றிருப்பது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. எப்படியிருப்பினும் இன்று இரவு 12 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com