பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் - ‘பிகில்’ ரசிகரின் முயற்சி
புதுக்கோட்டை அருகே நடிகர் விஜயின் தீவிர ரசிகரான சென்னையைச் சேர்ந்த டாடி ஜோ ‘பிகில்’ படம் வெற்றியடைய வேண்டி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி விருந்தாக அவரது ரசிகர்களுக்கு வெளியாகவுள்ள படம் பிகில். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நூதன வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இப்படத்தினை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், பொதுமக்களுக்கான உதவிகளை செய்யும் நோக்கிலும் சென்னையைச் சேர்ந்த டாடி ஜோ என்ற ரசிகர் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் டாக்டர் நந்திதா மருத்துவக் குழுவுடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை இன்று நடத்தினார்.
இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உடல் நலம் குறித்து பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று சென்றனர்.