சினிமா
விபத்தில் சிக்கி ஓய்வெடுத்த நாசர் மகனை உற்சாகப்படுத்திய விஜய்!
விபத்தில் சிக்கி ஓய்வெடுத்த நாசர் மகனை உற்சாகப்படுத்திய விஜய்!
2014ம் ஆண்டு மே மாதம் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த ஃபைசலிடம் அவரது வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார் விஜய். அங்கு வெகுநேரம் செலவிட்ட விஜயுடன் ஃபைசல் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். தற்போது அந்தப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு நாசரின் மனைவி கமீலா மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். அந்தப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. விஜயுடன் தமிழன், வசீகரா உள்ளிட்ட ஐந்து படங்களில் நாசர் நடித்துள்ளார்.