விஜய் தேவரகொண்டா- சமந்தாவின் ‘குஷி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் தயாராகி வரும் ‘குஷி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா- சமந்தா
விஜய் தேவரகொண்டா- சமந்தா@MythriOfficial twitter

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அதேபோல், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. காதல், குடும்பம் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. ஷிவ நிர்வாணா இயக்கி வரும் இந்தப் படம், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘குஷி’ படத்தின் முதல் சிங்கிளான ‘என் ரோஜா நீயே’ என்றப் பாடல், இன்று விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் இந்தி மற்றும் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘லைகர்’ படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘குஷி’ படத்தை விஜய் தேவரகொண்டா மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ படத்திற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

‘குஷி’ படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com