விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிக்கும் புதியப் படம் -நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் பட தலைப்பு?

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிக்கும் புதியப் படம் -நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் பட தலைப்பு?
விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிக்கும் புதியப் படம் -நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் பட தலைப்பு?

பிரபல தெலுங்கு நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘குஷி’ என்ற பெயரை சூட்டி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ திரைப்படத்திற்கு, விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படம் ‘லிகர்’. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது பிரபல தெலுங்கு இயக்குநரான ஷிவ நிர்வாணா இயக்கும் புதியப் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது காஷ்மீரில் நடத்தப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கதீஜாவாக நடித்திருந்த சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டா படத்தின் படப்பிடிப்பில், சமந்தா கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

தற்காலிகமாக ‘விடி11’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு, நடிகர் விஜய், ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘குஷி’ படத்தின் டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் மே 9- ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, இன்னும் சில தினங்களில் காஷ்மீரில் முடிவடைய உள்ளநிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் கேரளா ஆலப்புழாவில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com