\
அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா: மைக் டைசனுடனான படப்பிடிப்புக் காட்சிகள் துவக்கம்

அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா: மைக் டைசனுடனான படப்பிடிப்புக் காட்சிகள் துவக்கம்

அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா: மைக் டைசனுடனான படப்பிடிப்புக் காட்சிகள் துவக்கம்
Published on

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தில் நடிக்கும் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் படக்காட்சிகளை எடுக்க ‘லைகர்’ படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அமெரிக்காவில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் தேவரகொண்டா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு வெளியான ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் மைக் டைசன் நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா - மைக் டைசன் காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com