\
'வாரிசு' படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

'வாரிசு' படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

'வாரிசு' படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
Published on

படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு நடிகர் விஜய் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு எனப் பலரும் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் எண்ணூர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் சிலர் அங்கு சென்றனர். ஆனால் விஜய் வெளியே வராததால் ஏமாற்றமடைந்தனர்.

இந்த சூழலில் நேற்று இரவு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சென்றார் விஜய். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

படத்தின் சண்டைக் காட்சிகள், மற்றும் பாடல் காட்சிகள் மட்டும் மீதமுள்ள நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது.

இதையும் படிக்க: வைரலாகும் ‘மேகம் கருக்காதா’ மேக்கிங் வீடியோ - அமோக வரவேற்புக்கு நன்றி தெரிவித்த ஜானி!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com