“தமிழினத் தலைமையே” - விஜய்யை அரசியலுக்கு அழைத்த போஸ்டர்
நடிகர் விஜயை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, மதுரை முழுவதும் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
திரைப்பட நடிகர் விஜய், நாளை மறுதினம் 22-ம் தேதி தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்பிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலதிட்ட உதவிகள் மற்றும் பொது பணிகளில் முன்னெடுத்து கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கும் தயாராகி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை முழுவதும் விஜயின் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் விஜய்-யை அரசியலுக்கு அழைத்தும், ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், விஜய் அரசியலுக்கு வந்து, முதல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என்றும் சுவரொட்டிகள் வாயிலாக ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.