‘இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்’  - மாஸாக வெளியான விஜயின் ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்!

‘இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்’ - மாஸாக வெளியான விஜயின் ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்!

‘இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்’ - மாஸாக வெளியான விஜயின் ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்!
Published on

நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயை வைத்து இயக்கி வருவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

‘பீஸ்ட்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகிய நிலையில், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ளது. இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் அல்லது ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்கத் துவங்கியிருந்தனர்.

இதையடுத்து இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாளை...’ என்று மட்டும் பதிவு செய்து, கடந்த 29-ம் தேதி பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. ட்ரெயிலரில் மால் ஒன்றை கடத்தல் கும்பல் ஹைஜாக் பண்ணியது போன்று ஆரம்பிக்கிறது. இதனை தடுக்கும் அதிகாரியாக நடிகர் விஜய் நடித்துள்ளதாக தெரிகிறது. மாலில், தீவிரவாதிகளை அழிப்பதற்கு முன்னதாக, யோகி பாபுவிடம், பயமா இருக்கா, இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும் என்று கூறுகிறார். தற்போது விஜய் ரசிகர்கள் இந்த ட்ரெயிலர் வீடியோவை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதேபோல், நான் ஒரு அரசியல்வாதி அல்ல ராணுவ வீரர் (I am not a polician I am a soldier) என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. செல்வராகவன் அரசு அதிகாரியாக நடித்துள்ளார். அவரது குரல்தான் இந்த ட்ரெய்லர் முழுவதும் இடம்பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com