’மீராவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்..!’ - மகளின் மரணம் குறித்து விஜய் ஆண்டனி உருக்கம்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மரணமடைந்த நிலையில், தந்தையாக உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
Vijay Antony
Vijay AntonyTwitter

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16 வயதான மகள் மீரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே மீரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் மூன்று மணி அளவில் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் வீட்டில் சுயநினைவின்றி கிடந்த மீராவை மீட்டு பணியாளர்கள் உதவியுடன் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மீராவை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஜய் ஆண்டனி மகளின் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜாதி, மதம், பணம், பொறாமை இல்லா அமைதியான இடத்திற்கு சென்றிருக்கிறாள்!

மகளின் மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஜய் ஆண்டனி, மகளை பிரிந்த தந்தையாக உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், “ அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்றிருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்.

அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com