\
மீண்டும் அரசியல்வாதி ஆகிறார் விஜய் ஆண்டனி!

மீண்டும் அரசியல்வாதி ஆகிறார் விஜய் ஆண்டனி!

மீண்டும் அரசியல்வாதி ஆகிறார் விஜய் ஆண்டனி!
Published on

நடிகர் விஜய் ஆண்டனி, அரசியல்வாதியாக மீண்டும் நடிக்கிறார். 

ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம், ’எமன்’. இதில் அவர் அரசியல்வாதியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை அடுத்து அவர் மீண்டும் அரசியல்வாதியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை 'ஆள்', 'மெட்ரோ' படங்களை இயக்கிய, ஆனந்த கிருஷ்ணா இயக்குகிறார். 

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி ராஜா தயாரிக்கிறார். பிரசாந்த் நடித்த 'ஜாம்பவான்', அர்ஜுன் நடித்த 'வல்லக்கோட்டை' படங்களை தயாரித்தவர் இவர். இப்போது, சசிகுமார், நிக்கி கல்ராணி நடிக்கும் 'ராஜவம்சம்' படத்தை தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் நான்காவது படம் இது. அரசியல் கலந்த த்ரில்லர் படமான இதன் தொடக்க விழா, நேற்று நடந்தது. 

விஜய் ஆண்டனி, இயக்குனர் ஆனந்த கிருஷ்ணா உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்துக்கு ஜோகன் இசை அமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com